அதிகம் படிக்கப்பட்ட பதிவு

வாணியம்பாடியில் சாலை மறியல் போராட்டம்-100க்கும் மேற்பட்டோர் கைது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் கடந்த 21 ஆம் தேதி ஈ.வி.கே.எஸ் மற்றும் குஷ்பு பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. இதற்காக வாணியம்பாடி நகரில் முக்கிய வீதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகளைகட்டி அலங்கரித்து இருந்தனர்.

இந்நிலையில் இக்கூட்டம் நடத்த நகராட்சி அனுமதி வழங்க தாமதம் ஆனதால் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ரத்தானது. இந்நிலையில் முதலமைச்சரின் பிறந்த நாள் முன்னிட்டு அதிமுகவினர் கட்சி பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் வைத்துள்ளனர்.

இதனால் இடையுறாக உள்ள காங்கிரஸ் கட்சி கொடிகளை நகராட்சி நிர்வாகம் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி அப்புறபடுத்தி குப்பை லாரியில் ஏற்றி சென்றனர். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி குப்பை லாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை நடத்த நகராட்சி நிர்வாகம் முன்வராததால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வாணியம்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் போலீசார் விரைந்துவந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது சமரசத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் காவல் துறையினர் முன்பாக தீக்குளிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார் .போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் சமரச எற்க்கததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசார் கைது செய்தனர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வரும் வாகனங்களை மாற்று பாதை வழியாக அனுப்பி வைத்தனர் .இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவதிப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு