தமிழக சட்டப்பேரவை தேர்தல், மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து நேற்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் ஐந்து இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் வெற்றி பெற்றார்.
கடையாநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் அவர்கள் வெற்றி பெற்றார்.
செஞ்சி தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எஸ். மஸ்தான் அவர்கள் வெற்றி பெற்றார்.
பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மைதீன் கான் அவர்கள் வெற்றி பெற்றார்.
மேலும், வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் நிலோஃபர் வெற்றி பெற்றார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்