அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சட்டமன்றத்தில் தமிழக அரசிற்கு எதிராக வாக்களிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு

சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அறிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் நாளை (18.02.2017) அன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவரவிற்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைபாடு குறித்து கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலை, மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்காலத்தில் வலிமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் சட்டமன்ற வாக்கெடுப்பில் தமிழக அரசிற்கு எதிராக வாக்களிப்பதென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு