அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மாறன் சகோதரர்கள் ஜூலை 11 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்

ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற விவகாரத்தில், அன்னிய செலாவணி பண பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகக் கூறி, அமலாக்க அதிகாரிகள், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் உட்பட 6 பேர் மீது, கடந்த 8 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றபோது, இவ்வழக்கில் போதிய முகாந்திரம் இருப்பதால்,தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்டோர் வரும் ஜூலை 11ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

மேலும் சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையையும், அன்றைய தினத்திற்கே நீதிபதி ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு