நாளை குரூப் 4 தேர்வு : 820 இடத்திற்கு 10,20,666 பேர் தேர்வு எழுதுகின்றனர்
காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.
காலியாக உள்ள 820 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வு 244 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி என்பதாலும், நேர்முகத் தேர்வின்றி, எழுத்துத் தேர்வின் மூலம் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதாலும் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
நாளை நடைபெறும் தேர்வை 10 லட்சத்து 20 ஆயிரத்து 666 பேர் எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 250 தேர்வுக் கூடங்களில் 77 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு கூடத்தில் செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்