அதிகம் படிக்கப்பட்ட பதிவு

அடுத்தக் கட்டத்திற்கு தயாராகும் ஏ.எல்.சி.கல்லூரி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் வழியில் அமைந்துள்ளது
ஏ.எல்.சி. கல்லூரியானது (A.L.C. College) 2004 சுனாமி அன்று அமெரிக்காவிலிருந்து
நிதிப் பெறப்பட்டு இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் வெகுசில பாடப்பிரிவுகளே
(Courses) இருப்பதால், மேலும் சில பாடப்பிரிவுகளைச் சேர்க்க, பரங்கிப்பேட்டை மக்கள் மத்தியில் 22-02-2016 (திங்கள்கிழமை) அன்று காலை 09:30
மணியளவில் ஓர் கருத்தரங்கம் நடைப்பெற்றது.


 


பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரான, ஹாஜி. டாக்டர். M. S. முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இக்கருத்தரங்கத்தில் H. M. ஹனீஃபா, S. S. அலாவுதீன் உடன் நிதிதாரர்களும் (அமெரிக்கர்களும்) உட்பட ஆண்களும் பெண்களும் பலர் கலந்துக்கொண்டனர்.





இக்கருத்தரங்கத்தில், தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை (Fire and Safety Management) போன்ற சில குறுகிய கால பாடப்பிரிவுகளும் கேட்டெரிங் (Cattering), வாகனவியல் (Automobile) போன்ற சில தொழில்நுட்பப் பாடப்பிரிகளும் (Diploma Courses) கொண்டு மேம்படுத்தலாம் என மக்கள் தத்தம் கருத்துகளை தெரிவித்தனர். மேலும், கல்லூரிக்கு விளம்பரம் தேவை என்பது போன்ற பல ஆலோசானைகள் பெறப்பட்டன.





இவ்வாறு நடைப்பெற்ற இக்கருத்தரங்கம், மக்கள் சார்பாக நன்றிகள் தெரிவித்து முடிவுக்கு வந்தது.

















கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு