கடந்த ஆண்டு (2015) டிசம்பர் மாதம் கலிஃபோர்னியாவில்
அமைந்துள்ள ‘சென்பெர்னார்டின்’–இல் நடைப்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அந்த தாக்குதலில்
கிடைத்த ஒரு ‘ஆப்பிள்’ கைப்பேசியை திறக்க சொல்லி, அமெரிக்க பெடெரல் நீதிமன்றம் சார்பாக
‘ஆப்பில்’ நிறுவனத்திடம் வேண்டுகோள் விடப்பட்டது.
தனியுரிமை கெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘டிம் குக்’-ன் இந்த பதிலுக்கு, ‘சுந்தர்
பிச்சை’, ‘ஜேன் கோம்’, ‘ப்ராட் ஸ்மித்’ உள்ளிட்டோர் ஆதரவு தெறிவித்துள்ளனர்.
‘கூகுல்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான
‘சுந்தர் பிச்சை’ அவர்கள் கடந்த 17-02-2016 (புதன்கிழமை)கு பிறகு ‘டிம் குக்’ற்கு ஆதரவு
தெறிவித்தவண்ணம் கூறுகையில், “இது போன்ற செயல்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனைகளை
ஏற்படுத்தும். மேலும் அவர்களது நம்பிக்கையை அழித்துவிடும்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
‘வாட்ஸாப்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான
‘ஜேன் கோம்’ அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் ‘டிம் குக்’ன் பதிலுக்கு பெறுமைப்பட்டதாகத்
தெறிவித்தார்.
‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் தலைவரும்,
தலைமை சட்ட அதிகாரியுமான ‘ப்ராட்ஸ்மித்’ அவர்கள் கடந்த
18-02-2016 (வியாழக்கிழமை) அன்று கூறுகையில், “அரசாங்கமானது மக்களின் பாதுகாப்பையும்
தனியுரிமையையும் நிலைப்படுத்த தெறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார், மேலும் பொதுமக்க்கள்
பாதுகாப்பாக இருக்கும் இடங்களிலும், அவர்களின் தனியுரிமைகள் பாதுகாப்பாக இருக்கும்
இடங்களிலும் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவர்களைத் தொடர்ந்து, ‘ஆப்பிள்’ நிறுவன ஊழியர்களும்,
தம் தலைமை நிர்வாக அதிகாரியின் பதிலுக்கு பாராட்டுகளை தெறிவித்தனர்.





கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்