அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மனிதநேயத்தின் சிறு துளியாக பரங்கிப்பேட்டை

சமீபத்தில் ஏற்பட்ட வட-கிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிப்படைந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
உள்மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு, உடை, போர்வை, பால், மளிகைப் பொருட்கள் போன்று அச்சமயத்தில் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தும் வரவேற்கப்பட்டு
வினியோகிக்கப்பெற்றன.
உதவிகள், பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பாகவும் வெவ்வேறு ஊர்களிலிருந்தும் பெறப்பட்டன. அதிலும் முக்கியமான ஒன்றுதான் இந்த (பின்வரும்) செய்தித் தொகுப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தையும், இருப்பிடங்களையும் இழந்த மக்களுக்கு வெளியூர் மற்றும் உள்ளூர் அமைப்புகள் சார்பாக ஐம்பது லட்சம் ரூபாய் (ரூ.50,00,000) வரை செலவிலான உணவும், உடைகளும், பொருட்களும் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும்போது, காயல்பட்டினம் புயல் வெள்ள நிவாரண மீட்புக்குழு, பரங்கிப்பேட்டையில் குடிசைவாழ் பகுதிகளைக் கண்டு, சுமார்
என்பத்தைந்து ஆயிரம் ரூபாய் (ரூ.85,000) மதிப்புள்ள 12 வீடுகள் கட்டித்தர உதவி செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து மேலும் பலரும் இந்த நற்கருமத்தில் ஈடுபட்டு 22
வீடுகளாகக் கட்ட, பரங்கிப்பேட்டை டெல்லி சாஹிப் தர்கா வளாகத்தில் 21-02-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 08:30 மணியளவில் அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் 10 வீடுகள் பரங்கிப்பேட்டையின் மற்ற பகுதிகளில் கட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டுவாழ் சகோதரர்கள் இடமிருந்து நிதியுதவி கிட்ட
வாய்ப்புகள் உள்ளதாகவும் அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு