இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆவணப்படம மூலம் கலவரத்தை நடத்த திட்டமிட்ட இந்து முன்னணி மற்றும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக புகார் அளத்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் அபுதாஹிர் (எ) அபூ, 506/2 சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அபூ உட்பட மூன்று பேரைக் கைது செய்ததையும் திண்டுக்கல் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆசிக் உட்பட நான்கு பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை.
இதனை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இதையடுத்து, தமிழக அரசு தலையிட்டு உடனே கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோருகிறது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்