புதுச்சேரி வாழ் இஸ்லாமியர்களுக்கு குருப் 'B' பணியிடங்களில் இடஒதுக்கீடு வேண்டியும், தற்போதைய இடஒதுக்கீட்டை 4% உயர்த்திட வலியுறுத்தியும் ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இன்று 29-02-2016 மாலை 4.00 மணி அளவில் கம்பன் கலையரங்கத்தில் இருந்து புதுவை சட்டமன்றத்தை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நடத்தினர்.
இப்பேரணியில், பாப்புலர் ஃப்ரண்ட-ன் புதுவை மாவட்ட செயலாளர் J.ரஃபி அவர்களின் தலைமை நடைபெற்றது. பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும், தஞ்சை மண்டல தலைவருமான அமீர் பாஷா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் ஆகியோர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்பேரணியில் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் காரைக்கால் மாவட்ட தலைவர் A.முஹம்மது ஹசன் குத்தூஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்