மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது சிறுபான்மை நலத்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.
இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது எம்.பி கண்டனம்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல்
செய்த பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம் அளிப்பதாகவும்,
சிறு பான்மை நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், பாராளுமன்ற
உறுப்பினருமான இ. அஹமது தெரிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு
அதனால் மத்திய அரசுக்கு சாதகமான சூழ்நிலை
ஏற்பட்டிருந்தும் கூட மத்தியபட்ஜெட் குறிப்பாக சாதாரண மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம்
அளிக்கிறது. மைக்ரோ பொருளாதார சிறத்தன்மை, உள்நாட்டு தேவைகளை வலுப்படுத்துதல்
மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
ஆகிய மூன்று முக்கிய சவால் களை நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். ஆனால், அந்த சவால்களை சந்திப்பதற்கான விவரங்களை அவர் வெளியிடாதது துர்திஷ்டவசமானது.
9 தூண்களின் அடிப்படையில் பட்ஜெட் அமைக்கப்பட்டிருப்பது சரியாக விளக்கப்படவல்லை.
தொழில் சமூகத்தினருக்கு பெரிய அளவில் சாதகமானது இந்த பட்ஜெட். கடந்த 9 மாதங்களாக ஏற்பட்டு வரும் வர்த்தக பற்றாக்குறை குறித்து
நிதி அமைச்சர் சொல்ல தவறிவிட்டார்.
சிறுபான்மை நலத்துறையை பொறுத்தவரை அதுக்காக ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட பட்ஜெட்டில் ரூ. 3713 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் 2016-17-ல் அந்த தொகை 2793 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், 2014-15 அத்துறையின் நடைமுறை செலவு 3069 கோடியாகும். இது மத்திய அரசாங்கம் சிறுபான்மை
சமுதாயத்தின் நலத்தை உதாசீனம் செய்வதை காட்டுகிறது. ஃப்ரீ மெட்ரிக் உதவித்தொகை 2015-16ல்
1400 கோடி ரூபாயாகும். அது தற்போது 931 கோடியாக அதாவது 109 கோடி இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருக்கிறது போஸ்ட் மெட்ரிக் உதவித்
தொகை திட்டம் 30 கோடி ரூபாய் குறைக்கப்பட்டி ருக்கிறது.
மௌலானா ஆசாத் கல்வி அமைப்புக்கு வழங் கப்பட்டு
வந்த தகுதி அடிப் படையிலான உதவித் தொகை இலவசபயிற்சி மற்றும் அதுசார்ந்த திட்டங் களுக்கு மானியம் கடந்த ஆண்டு அளவிலேயே இந்த ஆண்டும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பணவீக்கத்தை கருத்தில் கொள்ளும்போது இதில்
உயர்வு செய்யப்படவில்லை. ஐந்தாண்டுகளில் விவசாயி களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்
அதற்கான வழிமுறைக அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே வேளாண் துறைமோசமான நிலைமையில் உள்ளது. எனவே, அதுகுறித்துஒரு வெள்ளை அறிக்கை
வெளியிட வேண்டும்.வரிவிதிப்பை பொறுத்த வரை பட்ஜெட் கடுமையான போக்கை கொண்டிருக்கிறது. நேரடி வரி விதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மறைமுக வரிவிதிப்பில் லாபம் காணப்படுகிறது. இது சாதாரண மக்களின் மீது சுமை அதிகரிப்பதையும், கார்பரேட் துறையினர் நன்மை அடைந்திருப்பதையும் காட்டுகிறது. பட்ஜெட்டை பட்ஜெட்டால் சம்பளம் வாங்கும் பிரிவினரும் ஏமாற்றம்
அடைந்திருக்கிறார்கள்.மேற்கண்டவாறு இ.அஹமது சாஹிப் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்