அதிகம் படிக்கப்பட்ட பதிவு

பதட்டத்தை ஏற்படுத்தும் வீடியோக்கள்! அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் எதிர்ப்பு!

கடந்த சில நாட்களாக "தமிழகத்தைச் சூழும் ஜிஹாத்" என்ற தலைப்பில், தமிழகத்தின்  ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரிலும் தனித் தனியாக 5 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ஓடக் கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இவை யூடியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிலுள்ள அனைத்துக் காட்சிகளும் முஸ்லிம்களைக் குற்றவாளியாகச் சித்தரித்து, அவற்றைப் பார்க்கும் இந்து சகோதரர்களை ஆவேசப்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்டு, இந்துத்துவா அமைப்புகளால் வெளி யிடப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயநோக்கில் வடமாநிலங்களில் இதுபோன்ற வீடியோ தொகுப்பினை வெளியிட்டு கலவரங்களை உருவாக்கிய சங்பரிவார அமைப்புகள், தற்போது தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் சூழலில் பதட்டத்தை உருவாக்கி, கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் அடைய முயல்வதாகவே தெரிகிறது.

இதுகுறித்து தமிழக உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அனைத்து இஸ்லாமிய கட்சி மற்றும் மாற்று மத சகோதரர்கள் புகார் அளித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆகவே, தமிழக முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட வீடியோக்களை பரவாமல் தடுப்பதோடு மட்டுமின்றி, வெளியிட்டவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு