அதிகம் படிக்கப்பட்ட பதிவு

புதுச்சேரியில் கடவுச்சீட்டு சேவை மையம் ...

புதுச்சேரியில் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் திறப்பு

காரைக்கால் பகுதி மக்கள் புதிய பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) பெறுவதற்காகவும் மற்றும் புதுப்பிப்பதற்காகவும் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. எனவே, காரைக்கால் பகுதி மக்களின் அலைச்சலை குறைக்கும் விதமாக காரைக்காலை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலோ அல்லது மாநில தலைநகரான புதுச்சேரியில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் திறந்து அந்த கிளையிலோ காரைக்கால் பகுதி மக்களுக்கு பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பொது மக்கள் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு நிலைகளில் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் புதுவையில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் இருந்த பழமையான கட்டடம் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு, சென்ற 22.02.2016 அன்று திறப்பு விழா நடைபெற்றது.

புதுச்சேரியில் கடவுச்சீட்டு அலுவலகம் திறந்து இருப்பதன் மூலம் காரைக்கால் மாவட்டம் மட்டுமல்லாமல், புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கடவுச்சீட்டு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும், 3 நாட்களில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்றும் கடவுச் சீட்டு கோரி விண்ணப்பித்தவர்கள் தொடர்பாக காவல்துறை சோதனை நடைபெறும் நாள்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு