நாம் பயன்படுத்தும் pendrive எனப்படும் வெளிப்புர சேமிப்பு சாதனங்களில் அதிகம் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று shortcut
virus. அதாவது உங்கள் pendrive கோப்பில்
உள்ள தகவல்களில் உருவாகும் shortcut virus எனப்படும் குறுக்கு வழி கிருமியானது உங்கள்
தகவல்களுக்கு shortcut–ஐ உருவாக்கி விடும் மேலும் அப்படி உருவான shortcut அதனுடைய
உண்மையான தகவல்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இவற்றை சாதாரண Antivirus–ஆல். நீக்க முடியாது.
இதனை
நீக்குவதற்க்கு இரண்டு எளிய வழி முறைகள் உள்ளன .
1. வழிமுறை :
முதலில் உங்கள் pendrive-ஐ கணினியில் பொறுத்தி, பின்னர் (ÿ+R ) பொத்தானை அழுத்தவும் .அங்கு தோன்றும் திரையில் cmd என்று
தட்டச்சு செய்யவும். இப்போது உங்கள் முன் ஒரு கருப்பு திரை தோன்றும். அதில் attrib -h -r -s /s /d D:\*.* என்று தட்டச்சு
செய்யவும்.
குறிப்பு: மேலே உள்ள attrib -h -r -s /s /d D:\*.* இல் D என்பது உங்கள் pendrive
இருக்கும் முகவரியை குறிக்கும்.
(எ.கா) உங்கள் pendrive
G drive இல் இருந்தால் இதில் D கு பதிலாக G என்று தட்டச்சு செய்ய
வேண்டும்.
இப்போது
உங்கள் pendrive இல் உள்ள shortcut virus ஆனது அழிந்துவிடும். இவற்றை முழுமையாக அழிக்க
கணினியில் உங்கள் pendrive இல் உள்ள தகவல்களை நகல் எடுத்துக்கொண்டு பின்னர்
pendrive-ஐ format செய்யவும்.
இப்போது
உங்கள் pendrive-ல் உள்ள shortcut virus ஆனது முழுமையாக. நீங்கிவிடும். கடைசியாக கணினியில் வைத்த
உங்கள் தகவல்களை மீண்டும் pendrive –க்கு மாற்றிக் கொள்ளலாம்.
2. வழிமுறை:
Shortcut virus ஐ நீக்க கணினி மென்பொருள் தளங்களில்
பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இங்கே பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில்
நிறுவிக்கொள்ளுங்கள்.
பின்னர் கணினியில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து
பயணிகளையும் அணைத்துவிட்டு பதிவிறக்கம் செய்த பயணியில் உங்கள் pendrive ஐ தேர்வு செய்து clean என்ற
பொத்தானை அழுத்தவும்.
இது
உங்கள் pendrive இல் உள்ள அனைத்து shortcut virus ஐயும் அழிந்துவிடும். இறுதியாக கனினியை restart செய்யவும்.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்