அதிகம் படிக்கப்பட்ட பதிவு

1 கோடி கையெழுத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைதத்து முஸ்லிம் லீக்

மத்திய அரசு நாளுக்கு நாள் சிறுபான்மை மக்களுக்கு விரோத போக்குகளை மட்டுமே முன்னிறுத்தி வருகிறது. அதன் ஒரு உச்சகட்டமாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தை  சொல்லிவருகிறது.

கடந்த காலங்களில் இத்தகைய பிரச்சனைகள் வந்தபோது முஸ்லிம் லீக் நாடாளுமன்றத்தில் எதிர்த்து அத்தகைய சட்டத்தை முறியடித்திருக்கிறது. மீண்டும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற கருத்தை மத்திய அரசு கூறி வருவதை அடுத்து அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் தடுக்க சட்டத்தில் உள்ள சில உட்பிரிவுகளை நீக்க கோரி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 கோடி கையெழுத்து இயக்கத்தை நாடு முழுக்க முன்னெடுத்தது.

இக் கையெழுத்து இயக்கத்தை சமுதாய பெருமக்கள் மட்டும் அல்லாத அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்தோடு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதன் அடுத்து கட்டமாக இன்று (14-03-16) குடியரசு மாளிகையில் குடியரசு தலைவர் மாண்புமிகு திரு.பிரணாப் முகர்ஜி அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது M.P., தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.M.P., தேசிய செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் M.P., தேசிய துணைச் செயலாளர் அப்துல் பாசித் Ex.M.L.A., குர்ரம் அனீஸ் உமர், முஸ்லிம் லீக் மாநிலங்களவை உறுப்பினர் பி.வி. அப்துல் வகாப் M.P., ஆகியோர் சந்தித்து பெற்ற கையொப்பத்தை அளித்து கோரிக்கைகளை விரிவாக எடுத்து கூறினர்.

மேலும் இதை பற்றி பரிசீலனை செய்வதாக குடியரசு தலைவர் மாண்புமிகு திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் கூறினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு