அதிகம் படிக்கப்பட்ட பதிவு

நாளை முழு சூரிய கிரகணம்: சென்னையில் 26 நிமிடங்கள் தெரியும்

நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்க முடியும்.

சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் ஏற்படும். ஒரு ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படும். முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கலாம்.

முழு சூரிய கிரகணம் என்றால் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று தெரியும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கிரகணத்தை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முழுமையாக பார்க்க முடியும். கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் பாதி அளவில் தெரியும். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிரகணத்தை நன்றாக பார்க்க முடியும்.

இந்த கிரகணத்தை இந்திய மக்களும் பார்க்கலாம். இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் பாதி கிரகணத்தையே பார்க்க முடியும்.
சென்னையில் நாளை காலை 6.22 மணி முதல் 6.48 மணி வரை அதாவது 26 நிமிடங்கள் தான் கிரகணத்தை காண முடியும். கிரகணம் இந்திய நேரப்படி காலை 4.49 மணிக்கு துவங்கி காலை 9.08 மணி வரை நீடிக்கும்.

முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு