அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஆம்பூர் அருகே விபத்து - 4 பேர் பலி

சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் குமாரசாமி, இவருடைய மனைவி லட்சுமி மற்றும் மாமியார் கமலா ஆகியோர் காரில் பெங்களூரில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணா என்பவர் ஒட்டி வந்தார். அப்போது கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது காரின் முன்சக்கர டயர் வெடித்து. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு தடம் மாறியது. அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி வந்த லாரி மீதுகார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் பயணம் செய்த ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் குமாரசாமி அவருடைய மனைவி லட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருந்த கார் ஓட்டுனர் கிருஷ்ணா மற்றும் கமலா ஆகிய இருவரையும் அப்பகுதிமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கமலா ஆம்பூர் அரசு மருத்துவமனையிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன்யின்ரி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் முன்சக்கர டயர் வெடித்து அதில் பயணம் செய்த நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு