அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தி.மு.க. கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது மன நிறைவை அளிக்கிறது - கே.எம். காதர் மொகிதீன்

தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக் கியது மனநிறைவை அளிக் கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதின் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவில் முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தலைமையில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், எம். அப்துல்ரஹ்மான், எச். அப்துல் பாஸித், வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலை 11 மணி முதல் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. மாலை 5 மணிக்கு இக் குழுவினர் சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தனர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத் தானது.ஒப்பந்தத்தை கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனிடம் வழங்கினார்.

பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதா வது-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை (நேற்று) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீடு குழுவினருடன் நடந் தது.அப்போது முஸ்லிம் சமுதாயத் தினர் பெரும்பான்மையினராக வாழும் தொகுதிகளில் 15 தொகுதிகளை குறிப்பிட்டு,அதில் எங்களுக்கு 8 தொகுதி களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.அதோடு எங்கள் சமுதாயத் தின் கோரிக்கைகளையும்முன் வைத்தோம். இந்தப் பேச்சுவார்த்தை ஏறக்குறைய ஒரு மணிநேரம் நடைபெற்றது.தி.மு.க. குழுவினர் 8 தொகுதிகள் கேட்கிறீர்கள். கடந்த முறை உங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கினோம் என்று கூறினார்கள். அதற்கு நான் நன்றியை தெரிவித்துகொண்டு, கடந்த முறையை விட இப்போது எங்கள் கட்சி வளர்ந்துள்ளது; தமிழகத்தில் வாழும் 42 லட்சம் முஸ்லிம் சமுதா யத்தினர் முஸ்லிம் லீகை சமுதாய இயக்கமாக கருதுகி றார்கள். எனவே, முஸ்லிம் சமு தாயத்தை கண்ணியப்படுத்தும் வகையில் 8 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டோம்.

எங்கள் கோரிக்கைகளை அன்புடனும், கனிவுடனும் கேட்ட மு.க. ஸ்டாலின், துரை முருகன், ஐ. பெரியசாமி, ஆலந் தூர்பாரதி ஆகியோர் கலைஞ ரிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோபால புரத்தில் தலைவர் கலைஞரை சந்திக்க வருமாறு தெரிவித்த னர். கலைஞரை சந்தித்தோம். கோரிக்கைகளையும்வலியுறுத் தினோம். எங்கள் கோரிக்கை களை ஏற்று நடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளை பெருந்தன்மை யோடு எங்களுக்கு வழங்கினார். இது எங்களுக்கு பெருத்த மன நிறைவை அளிக்கிறது.

234 தொகுதிகளில் எங்க ளுக்கு ஒதுக்கிய 5 உள்ளன. தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் கோட்டையில் கலைஞர் முதல்வராக அமருவார்.தளபதி மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே’ பயணம் மேற்கொண் டார். அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும், பொது மக்கள் பட்ட கஷ் டங்களையும் கண்ணீர் மல்க அவரிடம் எடுத் துரைத்தார்கள். எனவே, ஆட்சி மாற்றம் அமைவது உறுதி.

5 தொகுதிகளை ஒதுக்கியுள் ளார்கள். எந்தெந்த தொகுதி என்பதை மற்ற கூட்டணி கட்சி களோடு பேசிய பிறகு எங்க ளுக்கு தெரிவிப்பார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய கட்சி. இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி.கேரளாவில் ஆட்சியில் உள்ளோம். எங்களுக்கு ‘ஏணி’ சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட் டுள்ளது. இந்தியா முழுவதும் ‘ஏணி’ சின்னத்தில் தான் போட்டியிடுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ‘ஏணி’ சின்னத்திலே தான் போட்டி யிட்டது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு