அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமிழகத்தில் 746 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை நீட்டிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

தமிழகத்தில், அங்கீகாரம் பெறாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு, மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்குவது என தமிழக அரசு கடந்த ஆண்டு 2 அரசாணைகளை பிறப்பித்தது. இதனை ரத்து செய்யவும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யக் கோரியும் சமூக ஆர்வலர்  பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் மே 31ம் தேதியுடன் முடிவடைவதால், அங்கீகாரத்தை நீட்டிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.  இதன் காரணமாக 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாவதோடு, இதனால் அங்கு பயிலும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு