லாஸ் ஏஞ்சல்ஸ்;அமெரிக்காவில், நேற்று வண்ண மயமாக
நடந்த, 88வது ஆஸ்கர் விருது விழங்கும் விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான
விருது, ஸ்பாட்லைட் படத்திற்கு கிடைத்தது. மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட் என்ற
திரைப்படம், ஆறு விருதுகளை அள்ளியது. இந்திய வம்சாளியைச் சேர்ந்த, ஆசிப்
கபாடியாவுக்கு, சிறந்த ஆவணப்பட பிரிவில் விருது கிடைத்தது.
சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இயக்குனர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட, 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படமாக, ஸ்பார்ட் லைட் அறிவிக்கப்பட்டது. மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட் படத்துக்கு, சிறந்த படத் தொகுப்பு உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. தி ரெவனென்ட் படத்தில் நடித்த, லியானர்டோ டி கேப்ரியோவுக்கு, சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், பிரபல பாப் இசை பாடகி லேடி காகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்தியாவைச் சார்ந்த ஒருவர், ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கியது இதுவே முதல்முறை.
இந்தியருக்கு விருது:பிரிட்டனில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிப் கபாடியாவுக்கு, சிறந்த ஆவணப்படத்திற்கான விருது கிடைத்தது. அதேசமயம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சஞ்சய் படேலின் அனிமேஷன் படமான, பியர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருது கிடைக்கவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த ஷார்மீன் அபைட், தன் ஆவணப்படமான,
ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரின்ஸ் ஆப் பர்கிவ்னஸ்க்காக விருது பெற்றுள்ளார்.
Source: தினமலர் Web News

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்