அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் AIMIM கட்சி போட்டி

ஹைதராபாத் எம்பி.,யான அசதுத்தீன் உவைசி அவர்களின் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் 'AIMIM' கட்சி தேசிய அளவில் முஸ்லிம் சமூகத்துக்காகவும் தலித் சமூகத்துக்காகவும் குரல் கொடுத்துவரும் செய்திகளை பல ஊடக பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி துவங்கி சில மாதங்களே ஆன நிலையில், வர கூடிய 2016 சட்டமன்ற தேர்தலில் AIMIM கட்சி சார்பாக அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் 'மறுப்பு' முகநூல் பக்கத்தின் ஆசிரியருமான ஜாகிர் ஹுசைன் அவர்களை வேட்பாளராக, கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஜி.எஸ்.இக்பால்,கட்சியின் பொருளாளர் மசூத் கான், மாநில இணைச்செயலாளர் இனாயத் ஷரீப் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று அறிவித்தனர்.

மேலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தனர்.

'தலைநகர் சென்னையில் ஒரு இடம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே களம் காண முடிவு செய்துள்ள AIMIM கட்சி, அந்த வாய்ப்பினை எனக்கு வழங்கியுள்ளதை நினைத்து பூரிப்படைகிறேன்' என்று வேட்பாளர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் கூறினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு