சவூதி கலாச்சார-தகவல் தொடர்பு அமைச்சகம் ஏற்பாடுச்செய்துள்ள சர்வதேச புத்தக கண்காட்சி தலைநகர் ரியாதில் கடந்த புதன்கிழமை துவங்கியது.
மன்னர் சல்மானின் வாழ்த்துச் செய்தியுடன், கலாச்சார-தகவல்தொடர்பு துறை அமைச்சர் டாக்டர் ஆதில் துரைஃப்புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்.அரபுலகம் மற்றும் உலகின் ஏராளமான இலக்கிய, கலாச்சாரபிரமுகர்கள் 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.
’வாசிப்புக்கு வயது இல்லை’ என்பது புத்தக கண்காட்சியின் கருப்பொருளாகும். புத்தக கண்காட்சி அரங்கம், கடந்த ஆண்டுகளிலிருந்து மாறுபட்டு மத்திய ரியாதின் வரலாற்று பின்னணியை எடுத்தியம்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகவெளியீட்டு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.மன்னர் அப்துல்லா சாலையையொட்டிய சர்வதேச கண்காட்சிஅரங்கில் புத்தக திருவிழா, மார்ச் 19 வரை நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கண்காட்சி துவங்கும். இதர நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்