அதிகம் படிக்கப்பட்ட பதிவு

வங்கிளின் கடன் விதி முறைகள் பாமரனுக்கு உண்டு பணம் படைத்தவர்களுக்கு அல்ல!!!!!!



அது நொட்டை இது நொட்டைன்னு வளர துடிக்கும் திறமையுள்ள சில படித்தவர்களை புறக்கணித்து அவர்களின் சிந்தனைகளை கூட காதில் ஏற்றி கொள்ளாத இந்த வங்கிகள் ..

வங்கிளால் புறக்கணிக்கப்பட்ட விவசாயி படித்த பட்டதாரிகளின் சாபம் தான் .இன்று வங்கிகள் நீதிமன்றத்தின் வாசலில் நிற்க்கிறது விஜய் மல்லையா வாங்கிய கடனுக்காக 

ஏழை வாங்கிய கடனை கூட கால தவனை அளிக்காமல் வசூழிக்க இரவில் ரவுடிகளை விட்டு மிரட்டும் இதே வங்கிகள் தான் இன்று பணம் பெருத்த ஓரு நபரிடம் தங்களின் ஓட்டு மொத்த ஆளுமைகளை அங்கீகாரத்தை தொலைத்து விட்டு நிற்க்கிறது 


கடனை கட்ட முடியா ஓரு விவசாயியை அடித்து இழுத்து செல்லும் இதே சமுகத்தில் தான் படித்த பெரும் கொள்ளையர்கள் இலகுவாக ஏமாற்றுகிறார்கள் 

நியாயம் நேர்மைக்கு எல்லாம் இந்த சமுகத்தில் மதிப்பில்லை .திருடுபவன் ஏமாற்றுபவனுக்கு தான் சமுகத்தில் அந்தஸ்த்து கொடுக்கப்படுகிறது 

வங்கிகளின் கட்டுபாடுகள் பாமர மக்களுக்கு தானே தவிர வசதி படைத்தவர்களுக்கு இல்லை என்பதற்க்கு இதை விட சாட்சியம் தேவையில்லை #வே 



கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு