திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது,
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர கோரியும், முக்கிய கோரிக்கையாக சிறைவாசிகள் விடுதலை தர கோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு நிலங்களை மீட்க மாவட்ட வாரியக
கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டியும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை முஸ்லிம்களுக்கு வீடு கட்டி தர கோரியும், ஒட்டு மொத்த கல்வி நிறுவனங்களும் அரசு உடமை ஆக்கப்படவேண்டியும், ஏழை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு சிறுபான்மை நல வாரியம் அமைக்க கோரியும்,
கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
மேலும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழகத்திற்கு ஆதரவு என்று
ஜமுமுக (JMMK)
நிறுவன தலைவர் இறையடியார் S.A.காஜா மொய்தீன் அவர்கள்
நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்