அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு நாடு, துருக்கி, எகிப்து, பஹ்ரைன், சூடான், ஜோர்டான், பாக்கிஸ்தான், கத்தார், குவைத், மொரோக்கோ, சாட், கொமரோ தீவுகள், மலேஷியா மற்றும் எமன் ஆகிய 20 நாடுகள், தங்களுடைய இராணுவத்தை ஒருங்கிணைந்து வடக்கு இடி 'North Thunder' என்ற பெயருடன் பதிய கூட்டு படை இராணுவத்தை துவக்கியுள்ளனர்.
இக்கூட்டு இராணுவ படையின் பயிற்சி மற்றும் அணிவகுப்பு, சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஹாப்ர் அல்-படின் என்ற இடத்தில் மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் ஐக்கிய அரபு நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், எகிப்து அதிபர் அப்தெல் பதாஹ் அல்-சிசி மற்றும் சவுதி மன்னர் சல்மான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த அணிவகுப்பில், தங்களுடைய நாட்டின் பல்வேறு மாதிரி போர் விமானங்கள், பீரங்கிகள், இராணுவ உபகரணங்கள், காலாட்படை, விமான பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் கப்பல் படைகளை அறிமுகம் செய்தனர்.
வடக்கு இடி வெளியிட்ட அறிக்கையில், தங்களுடைய சகோதர மற்றும் நட்பு நாடுகளில் ஏற்பட கூடிய சூழ்ச்சி எதிர்த்து ஒன்றாக இணைந்து அனைத்து சவால்களையும் சந்திப்போம் என்றும், உலகத்தை பாதுகாக்க அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்