அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தி.மு.க கொடி துவண்டு நின்ற போது அதை தூக்கி நிறுத்திய கொடி, பிறை கொடி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில், திராவிட முன்னேற்ற கழகத்தில் பொருளாலர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரளா மாநில தலைவர் பாக்காடு செய்யது ஹைதர் அலி தாங்கள் அவர்கள் மற்றும் இலங்கை மத்திய அமைச்சர் ரவூஃப் ஹகீம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க பொருளாலர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையின மக்களுக்கு கழக அரசு அளித்த 3.5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மக்கள் விரோத அதிமுக அரசின் வேதனைகளை மாநாட்டில் பட்டியலிட்டு அதிமுக ஆட்சியை அகற்ற ஒவ்வொருவரும் பிரச்சார பீரங்கிகளாக மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க கொடி துவண்டு நின்ற போது அதை தூக்கி நிறுத்திய கொடி இந்த பிறை கொடி என்று திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரளா மாநில தலைவர் பாக்காடு செய்யது ஹைதர் அலி அவர்கள், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 40 குடும்பங்களுக்கு (அணைத்து சமுதாய மக்களும் பயன் பெரும் வகையில்) புதிய வீடுகளை கட்டி தருவதாக அறிவித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. முஸ்லிம்களுக்கு கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.

2. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு இடம்.

3. சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழி மாணவர்களின் நலன்.

4. மஹல்லா ஜமாஅத் பதிவுக்கு அரசு அங்கீகாரம்.

5. தமிழக ஆயுள் சிறைவாசிகள் விடுதலை.

ஆகியவை இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு