அதிகம் படிக்கப்பட்ட பதிவு

உலக மகளிர் தினமாம்...!!!

உலக மகளிர் தினமாம்....!!!

இன்று மகளிர் தினம் உலகம் முழுக்க பலர் வாழ்த்து கூறிக்கொண்டும், ஆண்களுக்கு நிகராக பெண்களையும் மதிக்கவேண்டும் என்று சமுக வளைதளங்களில் கொக்கரித்து கொண்டுயிருப்பவர்களுக்கு "மகளிர் தினம்" எதற்காக...யாருக்காக..???

காலங்காலமாக மகளிர் தினம் என்று வந்துவிட்டாலே அரசியல்,ஆன்மீகம்,சினிமா, மற்றும் பலதுறையில் சாதித்தவர்களை வைத்து மற்ற பெண்களும் இவர்களை போல் முன்னேற வேண்டும் என்று எடுத்துரைப்பார்கள். எல்லோரும் சாதித்தவர்களை போல வாழமுடியுமா..? இல்லையா..? அல்லது அவர்கள் மட்டும் தான் மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டா..??

இந்த உலகத்தில் அதிகமான மக்கள் சாத்தித்த பிறகு தான் அவர்களை கணக்கிலேயே எடுப்பார்கள் பெண்களாயினும், ஆண்களாயினும் சாதிக்கும் முன் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதைவிட தூற்றுவதே அதிகமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 

ஒரு வருடத்தில் 364 நாட்களிலும் 24 மணி நேரத்திலும் அதுவும் பன்டிகை நாட்களில் ஓவர்டைம் செய்துகொண்டும் தன் குடும்பத்திற்காக தன் வாழ்நாளையே அர்பணிக்கின்ற ஒரு ஜீவன் உண்டெனில் அவள் தான் தாய் அவள் நம்மை சுமக்க,பராமரிக்க,குடும்பத்தை கவனிக்க சம்பளம் ஏதும் பெறுவதில்லை நமக்காகவே தன் சுகங்களை விட்டெறிந்த ஜீவன்....

சரித்திரம் புரிந்த பல பெண்மனிகள் தன் வாழ்க்கையை கனைவனை இழந்தோ, கனவனால் விவாகரத்து செய்யபட்டோ, காதலனால் ஏமாற்றபட்டோ, பிறக்கும் போதே அனாதயாய் வாழ்க்கையை ஆரம்பித்தோ, ஏழை கோலத்தில் திருமணம் முடிக்க வரதட்சனை கொடுக்க முடியாமல் முதிர்கண்ணிகளாய் இருக்கின்ற பெண்களை இவ்வுலகம் வெளிச்சம் போட்டு கான்பிப்பதில்லை காரணம் அவர்களை யாரும் பார்க்க கூட நேரமில்லை..(சாதித்த பிறகு அவர்களையே தலையில் தூக்கிவைத்து ஆடுவது வேறு கதை).

பெண்களை ஆண்களுக்கு நிகராக மதிக்க வேண்டும் என்று கூறும் சமுகவாதிகளும் வீட்டில் இருக்கும் தன் மனைவியையும், தாயையும் கண்டுகொள்வத்தில்லை.....அவ்வளவு ஏன் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடும் பெண்கள் கூட தங்களால் முடிந்த ஏழ்மை நிலையில் இருக்கின்ற பெண்களை மதித்து அவர்களுக்கு தேவையான செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை (காதலர் தினத்திற்கு கொடுக்கும் மரியாதை கூட மகளிர் தினத்திற்கு மெத்த படித்த சக பெண்களே கண்டுகொள்வதில்லை என்பதும் கூறவேண்டுமே).

இவ்வுலகில் ஆணுக்கு நிகராக பெண் என்பதற்கு தான் இறைவன் ஒருவரை ஒருவர் தேவையுள்ளவனாக படைத்துயிருக்கிறான் ஆண்கள்  பெண்களுக்கு  உட்கார வைத்து சமைத்து போட வேண்டுமென்றோ நான் சொல்லவில்லை அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலே போதும் அதுவே உண்மையான "மகளிர் தினம்"......

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு