அதிகம் படிக்கப்பட்ட பதிவு

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு சம்பந்தமாக காரைக்கால் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் முஹம்மது பிலால் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பார்வையாளரும், தமிழ் மாநில பொதுச் செயலாளருமான அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், SDPI கட்சியின் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூடியவர்ளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் கனி மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட பொருளாளர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக காரைக்கால் கனி நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு