உலக மகளர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக இன்று (08-03-2016) காலை 11.00 மணிக்கு திருப்பூர் சிராஜ் மஹாலில் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையம் காவல் ஆய்வாளர் G. பதுருன்னிஷா பேகம் M.COM., MA அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.
மேலும், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் A.ஆஷா அவர்கள் தலைமைதாங்கினார்.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் தேசியகுழு உறுப்பினர்கள் A. நஸீமா மற்றும் அலிமா M. ஷெஹனாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்