அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஜார்கண்டில் முஸ்லிம் கால்நடை வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட கோர சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட்கடும் கண்டனம்!

ஜார்கண்ட் மாநிலம் லடோகர் மாவட்டத்திலுள்ளபலுமத்தில் முஸ்லிம் கால்நடை வியாபாரிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரிப் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த இழிவான குற்றவாளிகளால் 13 வயதுடைய சிறுவனும் கொல்லப்பட்டுள்ளது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்களது எருமைகளை சந்தைக்கு ஓட்டி செல்லும் வழியில் அடித்து கொல்லப்பட்டு மரத்தினில் தொங்கவிடப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் இதேபோன்ற காரணத்தால் தாத்ரியில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் மற்றுமொரு கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.முஸ்லிம் கால்நடை வியாபாரிகள் இது போன்று தாக்கப்படுவது நாட்டில் முதல் முறை அல்ல. இக்கொடிய குற்றத்தில் ஈடுபடுவோர் சிறுபான்மையினருக்கு எதிரான மதவாத பிரச்சாரம் மற்றும் வெறுப்பு பேச்சுகளை மேற்கொள்ளும் வெறியர்களால் தூண்டப்படுகின்றனர்.

மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்டோரையும் அதற்கு பின்னால் மறைந்திருந்து ஆதரவளிப்போரையும் இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதே போல் மாநில அரசு ஏழை கால்நடை வியாபாரிகள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதோடு இதுபோன்ற சம்பவங்களை தூண்டிவிடும் முட்டாள்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு