அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மஹாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் இடைநீக்கம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது! - கே.எம். ஷெரிப்

புது டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷெரிப் அவர்கள் "பாரத் மாதா கீ ஜெய்" என்று கூற மறுத்த மஹாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான் இடைநீக்கத்திற்கு எதிராக கேள்வி எழுப்பினார். மேலும் இம்முடிவானது அறிவுக்கு பொருந்தாததோடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் தனது அறிக்கையில் கூறினார்.

மேலும் பா.ஜ.க, சிவசேனா, NCP மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாரிஸ் பதானை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற கலாச்சார பாஸிஸம் கடந்த காலங்களில் காணாத ஒன்று. பிரத்யேகமான மத நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ள உணர்ச்சிவயப்பட்ட கோஷங்களை கொண்டு தேசப்பற்றை மதிப்பிடுவது அரசியலமைப்பு சட்டம் அளித்த மத சுதந்திரத்திற்கும், மத சார்பற்ற விழுமியங்களுக்கும் எதிரானதோடு வெறிபிடித்த சிலர் குடிமக்களில் பெரும்பகுதியினரைதேச விரோதிகளாக சித்தரிக்கும் முயற்சியை எளிதாக்கிவிடும். ஜனநாயகத்தையும், தேசப்பற்றின் பன்முகத்தன்மையை மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் இன்னும் கூடுதலாக உணர வேண்டும் என்று கூறினார்.

மேலும் வாரிஸ் பதான் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பபெறுவதோடு மஹாராஸ்டிரா சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.எம்.ஷெரிப் அவர்கள் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு