அதிகம் படிக்கப்பட்ட பதிவு

திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி

இன்று காலை 12 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் தலைமையில் மமக மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மெளலவி ஜே.எஸ். ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ஸ்டானின் அவர்களை, அவர்களது இல்லத்தில் சந்தித்தனர்.

வர இருக்கும் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும் என்று கூறினார்கள்.

மேலும் இது குறித்து விரிவாக பேசி முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகிய கட்சிகள் திமுக கூட்டணி அங்கம் வகிக்கிறது. அதனால் இஸ்லாமியர்களின் அதிகமான வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும்.

முப்பெரும் சமுதாய கட்சிகள் ஒருங்கிணைந்து திமுக கட்சியின் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், அதிகபட்ச வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு