மனிதநேய ஜனநாயக கட்சியின் அங்கமான மனிதநேய கலாச்சார பேரவை வளைகுடா நாடுகளில் இயங்கிக்கொண்டு வருகிறது.
நேற்று மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு மாலை 6.00 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் பொதுமக்கள் ஆதரவுடன் நடந்தது.
மண்டலத்தின் செயலாளர் முத்துக்காப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள்.
மண்டலத்தின் துணை செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலத்தில் உறுவானது ஏன் என்பதை விளக்கினார்.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
குவைத் மண்டல சார்பாக நினைவு பரிசுகளை மாநில பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும்,மாநில செயலாளர் H.ராசுதீன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதில் பொது மக்கள்களும் தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சி சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக மண்டல பொருளாளர் நீடூர் நபீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்