அதிகம் படிக்கப்பட்ட பதிவு

எந்த கட்சி முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கின்றதோ அவர்களுக்கே எங்களின் ஆதரவு - ஆ.இ.இ.க

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மண்ணடி மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் கலந்து கொண்டார்கள் துவக்கமாக மதுரை மாவட்ட செயலாளர் மௌலவி முஹம்மது பைசல் அவர்கள் துஆச் செய்தார்கள் வரவேற்ப்புரை மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராகிம் மிஸ்பாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அந் நுபுவ்வா மக்தப் பாடத்திட்டத்தின் கீழ் உருவான அழகிய முறையில் குர்ஆனை ஓதும் துரூஸுல் குர்ஆன் கிதாப் ஆல் இந்தியாஇமாம்ஸ் கவுன்சிலின் மாநில துணைத்தலைவர் மௌலவி ஆதம் ஷபியுல்லாஹ் ஹலரத் அவர்கள் வெளியிட தேசியபொதுச்செயலாளர் ஷாகுல் ஹமீது பாகவி ஹலரத் அவர்கள் பெற்று கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட விசயங்கள் பேசப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது

1. தேசிய அளவில் நடத்தக்கூடிய முஸ்லிம் பிரிவினையை அனுமதியோம் என்ற ஒற்றுமைக்கான பிரச்சாரத்தை தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள்,கருத்தரங்குகள்,மஹல்லா பயான்கள், இமாம்கள் சந்திப்புகள், இதுவல்லாமல் போஸ்டர், துண்டு பிரசுரங்கள் என பலவகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வது.

2. அந் நுபுவ்வா மக்தப் பாடத்திட்டத்தின் கீழ் உருவான மக்தப் பாடத்திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக மக்தப் நடைபெறாத இடங்களில் இந்த பாடத்திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

3. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சனைகளான சிறைவாசிகள் விடுதலை, 7சதவீத இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி போன்ற முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான வாக்குறுதிகள் கொடுக்கின்றார்களோ அதேபோன்று முஸ்லிம் சமூகத்திற்கு சட்டமன்ற தேர்தலில் போட்டயிடுவதர்க்கு அதிக பிரதிநிதித்வம் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு விரைவில் நமது ஆதரவை தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

4. வருடந்தோறும் நடத்தி வரும் கோடைகால பாட வகுப்பை இந்த வருடமும் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் அதற்க்கான பாட நூல்கள் தேவைப்படுவோர் நமது மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு