அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் பரங்கிப்பேட்டை அணியினர் நான்காம் மற்றும் ஐந்தாம் பரிசைத் தட்டினர்



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில், மாநிலம் தழுவிய பூப்பந்தாட்டப் போட்டி நடைப்பெற்றது. நேற்றும் (19-03-2016), இன்றும் (20-03-2016) ஆக இப்போட்டி, பரங்கிப்பேட்டை பி.எம்.டி. நைனா மரைக்காயர் நினைவு மற்றும் பூப்பந்தாட்டக் கழகத்தின் சார்பாக, பரங்கிப்பேட்டை பி.எம்.டி. மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் பரங்கிப்பேட்டை, கடலூர், பழனி, திருச்சி, சென்னை உட்பட 19 ஊரைச் சேர்ந்த 24 அணிகள் கலந்துக் கொண்டனர்.

இப்போட்டியில் பூப்பந்தாட்ட வீரர்களின் கோட்டையான பரங்கிப்பேடடையைச் சேர்ந்த வீரர்கள் BMD-A, BMD-B, BMD-C என்று மூன்று அணிகளாக விளையாடினர்.

இப்போட்டியில், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த BMD-A அணியினர் ஐந்தாம் பரிசாக 5,000 ரூபாயையும், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த BMD-B அணியினர் நான்காம் பரிசாக 6,000 ரூபாயையும், திருவெற்றியூரைச் சேர்ந்த TBBC அணியினர் மூன்றாம் பரிசாக 8,000 ரூபாயையும், சென்னையைச் சேர்ந்த SRM பல்கலைக்கழக அணியினர் இரண்டாம் பரிசாக 10,000 ரூபாயையும், பழனியைச் சேர்ந்த PBBC அணியினர் முதல் பரிசாக 12,000 ரூபாயையும் பெற்றனர்.









இதே பரங்கிப்பேட்டை பி.எம்.டி. பூப்பந்தாட்ட மைதானத்தில், தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேசிய அளவிலான போட்டியில் ஹைதராபாத் அணியினர் முதல் பரிசையும், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடிய பரங்கிப்பேடை பி.எம்.டி. அணியினர் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர். இதே பரங்கிப்பேட்டை அணியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு (28-02-2016) சவூதி அரபியா நாட்டின் தம்மாமில் நடைப்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் அரைஇறுதி வரைச் சென்று திரும்பினர்.




கடந்த இரு நாட்களாக நடைப்பெற்ற இப்போட்டி, இன்று (20-03-2016), வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிறைவுப் பெற்றது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு