அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மின்னஞ்சலை கண்டுபிடித்த ராய் டாம்லின்சன் காலமானார்

மின்னஞ்சலை கண்டுபிடித்த அமெரிக்கரான, ராய் டாம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார்.

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வலையமைப்பினூடாக தகவல் அனுப்பும் யோசனையை, 1971ஆம் ஆண்டு இவர் முன்வைத்தார்.

அமெரிக்க பாஸ்டனில் கம்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றியபோது, முதலாவாது நவீன மின்னஞ்சலையும் அவர் எழுதினார்.

இன்று அனைத்து மின்னஞ்சல் முகவரிக்கு பயன்படுத்தப்படும் “@” குறியீடு பயன்பாட்டுக்கும், அவரே முன்னோடியாக இருக்கிறார்.

ஆனால் தனது முதலாவது மின்னஞ்சலில் என்ன எழுதப்பட்டது என்பது, தனக்கு நினைவில் இல்லை என டாம்லின்சன் தெரிவித்திருந்தார்.

அது முழுமையாக மறக்கக்கூடிய விஷயம் எனவும் அவர் விபரித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு