அதிகம் படிக்கப்பட்ட பதிவு

காணவில்லை என்று தேடப் பட்டு வந்த 'காஜா' கழுத்து அறுபட்டுக் கொலை..!

திருச்சி மாநகரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் காஜா முஹைதீன். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டரான இவரை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை. இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகில் காவிரி ஆற்றின் கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட காஜா முஹைதீனின் வருமானத்தை மட்டுமே அவரது குடும்பம் நம்பியிருந்த நிலையில், காஜா முஹைதீனின் படுகொலை அவரது குடும்பத்திற்குபெரும் இழப்பை பெற்றுத்தந்துள்ளது.

மேலும், இத்தகைய மாபாதக செயலுக்கு காரணமான உண்மையானகுற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு