இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மஹல்லா ஜமாஅத் மாநாட்டு விழுப்புரத்தில் மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் அவர்கள், கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 வீடுகளை பைத்துர் ரஹ்மான் இல்ல திட்டத்தின் அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்பதாக அறிவித்திருந்தார்.
இதன் அடுத்த கட்டமாக இன்று (14.03.2016) மாலை கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் கேரள மாநிலம் மலப்புர மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வின் போது, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.MP, மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா செயலாளர் இஸ்மாயில் பொருளாளர் ரஷீத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தினர் (KMCC) முன்னின்று இப்பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்