தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி குவைத் மண்டலம் சார்பாக 18/03/2016 நேற்று மாபெரும் இரத்ததான முகாம் குவைத் ஜாபரியா இரத்த வங்கியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மஹராஜ் MBA., அவர்கள் தலைமை வகித்தார்கள்.
குவைத் மண்டல மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் பந்தல்குடி சம்சுதீன் மற்றும் மண்டல பொருளாளர் பெருவலநல்லூர் அப்துல் சுக்கூர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இரத்ததான முகாமினை மண்டல தமுமுக செயலாளர் லால்குடி ஜபருல்லாகான் திருமறை குர்ஆன் வசங்களை ஓதி துவங்கி வைத்தார்கள் மண்டல ஆலோசகர் செய்யது பாஷா அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக கலக்கல் காங்கேயன் அவர்கள் , வெல்டன் புரோமோட்டர்ஸ் நிருவனர் உரிமையாள் வெல்டன் கெளஸ் அவர்கள், கோடை ஃபிரீஜ்ஸ்னுடைய சகோதரர் நஜீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இம்முகாமில் திரளாக மண்டல மற்றம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்து, நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நடைபெற்ற இரத்ததான முகாமில் தாரிக் அல்- கரபொலி ஜாப்ரியா இரத்ததான வங்கியின் Public Relation Officer அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்