குவைத்தில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் மற்றும் தமிழக பத்திரிகையாளர் பங்கேற்பு
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (18/03/2016)அன்று நண்பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஃகைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவரும், இந்தியன் முஸ்லிம் அசோஸியன் (ஈமான்) அமைப்பின் பொதுச் செயலாளருமான அல்ஹாஜ் குத்தாலம் ஏ. லியாகத் அலி அவர்களும், தங்கம் மாத இதழின் தலைமை நிர்வாகியும், ஆசிரியரும், மலேஷிய நண்பன் நாளிதழின் தமிழக செய்தியாளருமான ஆலி ஜனாப் டி. ஷேக் மொய்தீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. சுமார் 800க்கும் அதிகமான சகோர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஜும்ஆ ஃகுத்பா பேருரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ புனித உம்ரா செல்லும் பயணிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். இறுதியில் துஆவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.






கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்