தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் இரவு பகலாக வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகனங்களில் கணக்கில் வராத பணம் எடுத்துச்செல்வது, ஆயுதங்கள், மதுபாட்டில்கள் எடுத்துச்செல்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்