திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், இந்தியாவிலேயே காவல்துறையில் பெண்களை நியமித்தது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட கழக அரசின் பல்வேறு அரிய சாதனைகளை எடுத்துரைத்தார்.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு வேதனைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், ஒவ்வொரு கழக மகளிரும் குறைந்தது நூறு பேரை வீடு வீடாகச் சந்தித்து அதிமுக ஆட்சியின் அவலங்களை பிரச்சாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்