அதிகம் படிக்கப்பட்ட பதிவு

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டி உறுதி.

இன்று திமுகவின் இறுதி நாள் நேர்காணல் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடந்துள்ளது. ஸ்டாலின் சார்பில் பலரும் கொளத்தூருக்காக விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஸ்டாலின் பெயரில் மட்டுமே விருப்ப மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று திமுகவின் நேர்காணல் முடிவடைந்தது. இறுதி நாளான இன்று , சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட துறைமுகம், கொளத்தூர், எழும்பூர், திரு.வி.க.நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம்உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு இன்று காலை நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்தது.

அப்போது கொளத்தூர் தொகுதிக்காக ஸ்டாலினிடம் கருணாநிதி நேர்காணல் நடத்தினார். அவர் மட்டுமே விருப்பமனு செய்திருப்பதால் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு