நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் SDPI கட்சியின் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் "ஓற்றைக் கோரிக்கை" பொதுக்கூட்டம் சனிக்கிழமை (11-03-16) அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மேலப்பாளையம் மாவட்ட தலைவர் மவ்லவி கே.எஸ். சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் தலைமை மற்றும் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் இல்யாஸ் அவர்கள் துவக்கவுறை ஆற்றினார்.
இப்பொதுகூட்டத்தில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எம. நிஜாம் முகைதீன், மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயலாளர் அ. முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் ,10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய கோரி எழுச்சியுரை ஆற்றினார். மேலும் SDPI கட்சி சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவும் வகையில் 24 மணி சேவை ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.
SDPI கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே. ஹாயத் முஹம்மத் நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்