அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சென்னையில் காவல்துறை அராஜகம் - ஜமுமுக மாணவரணி கண்டனம்

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா நிர்வாக படுகொலை காரணமாக துணை வேந்தராக இருந்த அப்பாராவ் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். ரோஹித் வெமுலா கொலைக்கு நியாயம் கிடைக்காத நிலையில்

மீண்டும் அப்பாராவ் ஐதராபாத் பல்கலை. துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் துவங்கியிருக்கும் நிலையில் சென்னை சாஸ்திரி பவனை சாதி ஒழிப்பு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி, கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் வைத்தனர்.

திருமண மண்டபத்தில் இருந்த மாணவர்களிடம் தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட
காவல்துறை எஸ்.ஐ. சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஷிரீலா வை பலமாக தாக்கியுள்ளார்.

தாக்கியதில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் ஏற்ப்பட்டும் இரண்டு மணிநேரம் எந்த வித மருத்துவ சிகிச்சைக்கும் அனுமதிக்காமல் அராஜக போக்கை கையாண்ட தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஷிரீலா வை தாக்கிய காவல்துறை அதிகாரியின் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு