அதிகம் படிக்கப்பட்ட பதிவு

உருது மொழி உருவான கதை

இன்று நாம் வாழும் இந்தியா என்பது 1954ஆம் ஆண்டு முழுமையடைந்த ஒரு நாடு. அதற்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவின் வடிவம் வேறாகவும் அதற்கு முன்பு முகலாயர்களின் ஆட்சியில் வேறாகவும் இருந்தது.

முகலாயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை என்பது வரலாறு.

டில்லி சல்தனத், ராஜபுதானா, மங்கோலியா, விஜயநகர், மராதா, சேர தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம் என்று ஏறக்குறைய 500 நாடுகள் இங்கு இருந்தன. இந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு மொழி ஒரு கலாச்சாரம் என்று இருந்தது. முகலாயர்களின் வருகைக்கு பிறகு தான் இங்கே "ஹிந்துஸ்தான்" என்ற பெயரில் ஒரு தேசம் உருவானது. இதன் எல்லைகள் ஆப்கானிஸ்தான் முதல் பர்மா வரையிலும் மங்கோலியா முதல் இலங்கை வரையிலும் விரிந்து கொண்டே சென்றது. பல மொழி பேசும் மக்கள் பல கலாச்சாரம் பல இனம் பல பழக்கவழக்கங்கள் கொண்ட ஒரு நாடாக இது உருவம் பெற்றது. பல மொழி பேசும் மக்கள் ஒன்றாய் இருந்ததால் இராணுவ வீரர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக ஒரு பொதுவான மொழி தேவை என்பதை உணர்ந்த முகலாய மன்னர் ஷாஜஹான் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக ஒரு மொழியை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவரது உத்தரவுக்கு இணங்க உலகில் உள்ள அனைத்து மொழியியல் வல்லுனர்களும் இணைந்து உருவாக்கியது தான் உருதுமொழி ஆகும்.

உருதுமொழியானது அரபி, ஃபார்ஸி, துருக்கி, போஜ்புரி, கடிபோலி, பெங்காலி மற்றும் மராத்தா என பல மொழிகளையும் கலந்து உருவாக்கப்பட்டது ஆகும். இதன் பெரும்பான்மையான சொற்கள் கடிபோலி மொழியிலிருந்து எடுக்கப்பட்டிருந்ததால் இந்த புதிய மொழியை கடிபோலி என்றும் பலர் அழைத்து வந்தனர். ராணுவத்திற்காக உருவாக்கப்ட்ட மொழி என்பதால் இதற்கு உருது என்று அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்தனர். இது உருவாக்கப்பட்டது ராணுவத்திற்காக என்றாலும் பல மொழிகளை கலந்து உருவாக்கியதால் உருதுமொழி கவித்தன்மைகொண்ட மொழியாக உருவானது. இதன் கவித்தன்மை பல மொழி பேசும் மக்களையும் கவர்ந்து இழுத்தது. இதன் விளைவாக உருது மொழி நாடு முழுவதும் வேகமாக பரவியது.

முகலாயர்கள் காலத்தில் யார் மீதும் மொழியை திணித்தார்கள் என்று வரலாற்றில் எந்த இடத்திலும் இல்லை. இருந்தும் நாடு முழுவதும் உருதுமொழி பரவியது.

19ஆம் நூற்றாண்டு வரை அனைத்து மக்களாலும் பேசப்பட்டு வந்த உருது மொழியானது ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவும் சுதந்திர வேட்கையை விதைக்கவும் கவித்துவமிக்க உருதுமொழி பெரிதும் உதவியது.

உருது கவிஞர் அலாமா இக்பால் எழுதிய "சாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" என்ற பாடல் சிறந்த உதாரணம் ஆகும்.

இதை சகித்துக் கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதரவாளர்களை வைத்து ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தத்தை விதைத்தார்கள். மக்களை பிரிக்க வேண்டும் என்பதற்காக மக்களை ஒன்றினைக்கும் உருது மொழியை பிரித்தார்கள். உருதுமொழியில் சமஸ்கிருதத்தை கலந்து ஹிந்தி என்ற மொழியை உருவாக்கினார்கள். (உருது மொழி பேசுபவர் ஹிந்தியையும் ஹிந்திமொழி பேசுபவர் உருதுவையும் சரளமாக புரிந்து கொள்வதை இன்றும் நீங்கள் காணலாம்).

ஹிந்தி என்பது ஹிந்துக்களின் மொழி என்றும் உருது என்பது முஸ்லிமகளின் மொழி என்றும் பரப்பினார்கள். மொழிபிரிவிணை மக்களுக்குள் பிரிவிணையை ஏற்படுத்தியது. பின்னர் அது தேசப் பிரிவிணை வரை சென்றது. இதன் விளைவாக தான் பாகிஸ்தான் உருதுவை தேசிய மொழியாக அறிவத்ததும் ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக வேற்று மொழி பேசுபவர்களின் எதிர்ப்பையும் மீறி அறிவித்தார்கள்.

உருது ஆட்சிமொழியாக உள்ள பாகிஸ்தானில் உருதுமொழியில் பத்து பத்திரிக்கைகளும் வெளி வருவதில்லை. உருது இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கும் இந்தியாவில் இருபத்தி மூன்று பத்திரிக்கைகள் உருதுமொழியில் வெளியாகின்றன. இது தான் உருதுமொழியின் சிறப்பு.
ஆட்சியதிகாரமும் பிரிவிணைவாதமும் மொழியை அழிக்கவோ வளர்க்கவோ முடியாது  மாறாக அம்மொழி மக்களை கவர்ந்திழுக்க கூடியதாக இருக்க வேண்டும் என்பது இங்கே நிரூபனம் ஆகின்றது.

உருதுவை குறிப்பிட்ட மதத்தினரின் மொழி என்று செல்பவர்கள் அதற்கு எந்த ஆதாரத்தையும் தருவதில்லை.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு உருதுகவிஞர் என்பது குறிப்பிடதக்க எதார்த்த உண்மை.

இது தான் உருதுமொழியின் வரலாறு. உருதுமொழி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ இனத்தினருக்கோ சாதியினருக்கோ சொந்தமான மொழியில்ல.

இது ஒரு சர்வதேச மொழி.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு