அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் போராட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளிகுப்பம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளியை கிராமபுற மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது. அப்போது வகுப்பறைகள் கட்ட இட வசதி குறைவாக உள்ளதால்பள்ளிக்கு அருகே அப்பகுதியை சேர்ந்த சரோஜம்மால் என்பவர் 2014 ஆம் ஆண்டு 54 சென்ட் இடத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பெயருக்கு தானமாக வழங்கினார்.

அந்த இடத்தில் கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை ரூ.1 கோடியே 47 லட்சம் ஒதுக்கப்பட்டு பின்னர் கடந்த மாதம் பணிதுவங்கும் நிலையில் தனியார் கோழிப்பண்ணை நிறுவனர் அந்த இடம் தனுக்கு சொந்தமானது என்றார்.மேலும் அங்கே பள்ளிக்கட்டிடம்கட்ட அனுமதிக்க மாட்டேன் என்று கட்டிட பணிகள் தடுத்தி நிறுத்தியுள்ளார்.

கிராமமக்கள் காவல்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என அனைவரிடமும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், கிராமமக்கள் உதவியுடன் மாணவர்களை வகுப்பறையிலிருந்து வெளியேற்றி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வகுப்பறையில் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் தங்களுக்கு வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை தீவிரபடுதினர். போராட்டத்தின் போது பள்ளிக்கு தனமாக இடம் வழங்கிய மூதாட்டி தான் கொண்டுவந்த மணெண்ணெய் தன் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அதை தடுத்து நிறுத்தினார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போரட்டகார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நடவடிக்கை எடுபதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குவகுப்பறையில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு