அதிகம் படிக்கப்பட்ட பதிவு

முஸ்லிம்களுக்கு ஆட்டோ வழங்கும் முதல்வர்..

தெலுங்கானா மாநில சிறுபான்மை நலத்துறை சார்பில் வறுமையில் வாடும் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் பயன்படும் வகையில் ஐம்பது சதவீதம் மானியமாகவும், மீதி தொகை கடனாகவும் சொந்தமாக ஆட்டோ வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக சுமார் ஆயிரம் பேருக்கு ஆட்டோ வழங்க முடிவு செய்த நிலையில் தெலுங்கானா முழுவதும் உள்ள முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் 1700 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்த போது அனைவருக்கும் வழங்க முதல்வர் சந்திர சேகர் ராவ் உத்தரவிட்டார்.

வரும் 13 ம் தேதி ஹைதராபாத் நிசாம் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில துணை முதல்வர் முகமது அலி பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்குகிறார்.

- கொலச்சல் அஜீம்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு