அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சேப்பாக்கம் தொகுதி குறித்து 'ஹைதராபாத்'தில் ஆலோசனை..!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி நிலவரம் குறித்து 'AIMIM' கட்சியின் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் தையப் அவர்களுடன் ஹைதராபாத்தில் வேட்பாளருமாகிய ஜாகிர் ஹுசைன் அவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

'மஜ்லிஸ்' கட்சியில், தன்னந்தனியாக ஒத்தை 'எம்எல்ஏ'வாக அசதுத்தீன் உவைசி அவர்கள் செயல்பட்டு, இன்றைய தினம் 7 'எம்எல்ஏ'க்கள், 2 'எம்எல்சி'க்கள், 44 மாமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது குறித்து விளக்கினார், தமிழக(மேலிட) பொறுப்பாளர் தையப்.

ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் 'AIMIM' என்ற பெயரில் தேசிய கட்சியாக உருவாக்கி குறுகிய காலத்தில் மகாராஷ்டிராவில் தேர்தலை சந்தித்து 2 எம்எல்ஏக்கள் வெற்றி என்பதுடன், பல தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வந்த விஷயங்களையும் தெளிவு படுத்தினார், தையப்.

6 இடங்களில் போட்டியிட்டு பீகாரில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் 'கிஷன்கஞ்' உள்ளிட்ட தொகுதிகளில் இரண்டாம் நிலையை அடைந்தது குறித்தும், 81,000 வாக்குகள் பெற்றது குறித்தும் பாடம் நடத்தப் பட்டது.அதேவேளை, மகாராஷ்டிரா, பீகார் போன்ற பகுதிகளில் போட்டியிட்ட வேறு சில இஸ்லாமிய கட்சிகள் 1000 ஓட்டுகள் பெறுவதற்கு கூட சிரமப்பட்டதை எடுத்து சொன்னார்கள்.

மொத்தத்தில் மக்களின் மனங்களை கவருவது குறித்தும் தேர்தல் களப்பணிகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஹைதராபாத் மாநகராட்சித்தேர்தலில் 60 இடங்களில் மட்டும் போட்டியிட்டு 44 இடங்களை வென்றது குறித்தும் விளக்கப் பட்டது.

எனவே, தமிழகத்தில் சேப்பாக்கம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளிலும் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். கடும் பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் சுமார் 4 மணி நேரம் நம்முடன் செலவழித்து, சமூக சிந்தனைகளையும் சமுதாய அவலங்களையும் படம் பிடித்துக் காட்டிய தையப் அவர்கள், தமிழக முஸ்லிம்களின் நிலை குறித்து வேதனையை வெளிபடுத்தினார்.

545 எம்பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனி ஆளாக நின்று அசதுத்தீன் உவைசி அவர்கள் கர்ஜிக்கும் நிலையில், தமிழக முஸ்லிம் தலைவர்கள் 'திமுக-அதிமுக' போன்ற கட்சிகளை எதிர்த்து குரல் கொடுக்க தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்ப பட்டது.எக்காரணம் கொண்டும் பெரிய கட்சிகளுடன் சமரசம் பேசி,ஓரிரண்டு இடங்களை பெற்று, அவர்களுக்கு அடங்கிப் போவதை 'AIMIM' கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றார் பொறுப்பாளரான தையப்.

எனினும், ஓரிரு நாளில் ஹைதராபாத் திரும்பிய பின்னரோ அல்லது டெல்லியில் இருந்தவாரோ 'மீடியா'க்கள் முன்னிலையில் தமிழக வேட்பாளர்களை உவைசி அவர்கள் அறிவிப்பு செய்யவுள்ளதாக தையப் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு