திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர் படுகொலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தமிழக மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி குற்றச்சாட்டு!
திருச்சி மாநகரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் காஜா முஹைதீன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டரான இவரை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை. இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகில் காவிரி ஆற்றின் கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிரேன், மேலும் அவரது குடும்பத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்திற்கெதிரான அச்சுறுத்துதல்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் சூழலில், இப்படியான படுகொலைகள் நிகழ்வது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதையே காட்டுகிறது.
கொலை செய்யப்பட்ட காஜா முஹைதீனின் வருமானத்தை மட்டுமே அவரது குடும்பம் நம்பியிருந்த நிலையில், காஜா முஹைதீனின் படுகொலை அவரது குடும்பத்திற்குபெரும் இழப்பை பெற்றுத்தந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு தேர்தல் கமிஷனிடம் முறையாக அனுமதி பெற்று பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும்.
மேலும், இத்தகைய மாபாதக செயலுக்கு காரணமான உண்மையானகுற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்கள் அமைதியாக வாழ தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்